/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'காமெடி கில்லாடிகள்' நடிகர் தற்கொலையில் புது திருப்பம்
/
'காமெடி கில்லாடிகள்' நடிகர் தற்கொலையில் புது திருப்பம்
'காமெடி கில்லாடிகள்' நடிகர் தற்கொலையில் புது திருப்பம்
'காமெடி கில்லாடிகள்' நடிகர் தற்கொலையில் புது திருப்பம்
ADDED : ஆக 11, 2025 04:44 AM

உத்தரகன்னடா: சின்னத்திரை நடிகர் சந்திரசேகர் சித்தி தற்கொலை விஷயத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தன் மனைவியின் கொடுமை தாங்காமல், தற்கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. கணவரை மனைவி தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகன்னடா மாவட்டம், எல்லாபுரா தாலுகாவின் வஜ்ரள்ளியின் சிமனள்ளி கிராமத்தில் வசித்தவர் சந்திரசேகர் சித்தி, 31. இவர் சின்னத்திரை தொடர்களில், சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்தார். கன்னட தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான, 'காமெடி கில்லாடிகளு' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று, பிரபலமானவர்.
இந்த ஷோ வெற்றி பெற்றதால், தனக்கு சின்னத்திரை, வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என, எதிர்பார்த்தார். ஆனால் கிடைக்காததால், பெங்களூரில் இருந்து, தன் சொந்த ஊருக்கு வந்தார். பிழைப்புக்காக கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த வாரம், இவர் திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பட வாய்ப்புகள் கிடைக்காமல், கூலி வேலை செய்ய நேரிட்டதால், தற்கொலை செய்திருக்கலாம் என, கூறப்பட்டது. ஆனால், அவரது மனைவியின் சித்ரவதையே காரணம் என, தகவல் வெளியாகிஉள்ளது.
எல்லாபுராவின் கப்ஜி கிராமத்துக்கு கூலி வேலைக்காக மனைவியுடன் சென்றிருந்த சந்திரசேகர், அதே கிராமத்தின் வனப்பகுதியில் மரம் ஒன்றில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவரது முடிவுக்கு மனைவியே காரணம் என, சந்திரசேகரின் தாயார், எல்லாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தம்பதிக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபமே, அவரது தற்கொலைக்கு காரணம் என்பது தெரிய வந்தது.
இதற்கிடையே சந்திரசேகரை, மரக்கட்டை மற்றும் துடைப்பத்தால் மனைவி கண் மூடித்தனமாக தாக்கிய வீடியோ, நேற்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இது குறித்து, அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.