தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுற்றுலாவை மேம்படுத்த புதிதாக இணையதளம்

 சுற்றுலாவை மேம்படுத்த புதிதாக இணையதளம்

 சுற்றுலாவை மேம்படுத்த புதிதாக இணையதளம்


ADDED : ஜூன் 24, 2026 12:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 12:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்த, 'நம்ம கைடு' எனும் பெயரில் இணையதளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும்போது, அந்த இடத்தின் சிறப்பு, வரலாறு, கலாசாரம் குறித்த தகவல்களை சுற்றுலா பயணியருக்கு எடுத்துரைப்பதில், 'டூரிஸ்ட் கைடு'களின் பங்கு முக்கியமானது.

இருப்பினும், மாநிலத்தில் சுற்றுலாவுக்கு செல்லும் பயணியருக்கு டூரிஸ்ட் கைடுகளை கண்டறிவது சவாலான காரியமாக உள்ளது. இவ்விஷயத்தில் தீர்வு காண, மாநில சுற்றுலாத்துறை புதிய நடவடிக்கை எடுத்து உள்ளது. அதாவது, 'நம்ம கைடு' எனும் பெயரில் இணையதளத்தை துவங்க உள்ளது.

இந்த இணையதளத்தின் மூலம் டூரிஸ்ட் கைடுகளை குறைந்த விலையில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த சேவை, முதல்கட்டமாக, முக்கியமான சுற்றுலா தலங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, சுற்றுலாத்துறை அமைச்சர், கே.ஜே.ஜார்ஜ் கூறியதாவது:

கர்நாடகாவில் சுற்றுலாவை மேம்படுத்த நம்ம கேடு இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. இது, சுற்றுலா பயணியருக்கு சிறந்த அனுபவத்தை தரும். நமது மாநிலத்தின் வரலாறு, கலாசாராம் ஆகியவற்றை வெளிநாட்டினர் அறிய உதவும். உள்ளூர் மக்கள் டூரிஸ்ட் கைடுகளாக மாறலாம். புதிதாக வேலை வாய்ப்பு உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us