/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆக்சிஜன் இல்லாததால் பச்சிளம் குழந்தை பலி
/
ஆக்சிஜன் இல்லாததால் பச்சிளம் குழந்தை பலி
ADDED : மார் 22, 2025 06:46 AM
மைசூரு ; ஆம்புலன்சில் போதிய ஆக்சிஜன் இல்லாததால், பிறந்து மூன்று நாட்களே ஆன, பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு டவுன் ஸ்ரீராமபுரா லே - அவுட்டை சேர்ந்தவர்கள் குமார் - ரத்னம்மா தம்பதி.
கர்ப்பிணியாக இருந்த ரத்னம்மா, இம்மாதம் 17ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் 18ம் தேதி, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
நேரம் செல்லச்செல்ல குழந்தையின் முகம் நீல நிறமாக மாற துவங்கியது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள், டாக்டர்கள், நேற்று முன் தினம் மேல் சிகிச்சைக்கு மைசூரு நகருக்கு, ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்சில் போதிய ஆக்சிஜன் இல்லாததால், மைசூருக்கு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது.
ஆம்புலன்சில் அனுப்புவதற்கு முன், தேவையான வசதிகள் உள்ளதா என்பதை பார்க்காமல் அனுப்பியதால் தான், குழந்தை இறந்தது.
டாக்டர்கள், ஊழியர்களின் அலட்சியம் தான் காரணம் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.