திருமணமான எட்டு மாதங்களில் புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை
திருமணமான எட்டு மாதங்களில் புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மே 07, 2026 10:57 PM
யஷ்வந்த்பூர்: திருமணமான எட்டு மாதங்களில் புதுப்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு யஷ்வந்த்பூரில் வசிப்பவர் மகேஷ், 30. இவருக்கும், சாரதா, 26 என்பவருக்கும், எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் தம்பதி சந்தோஷமாக வாழ்ந்தனர்.
ஆனால் கடந்த மூன்று மாதங்களாக தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் தம்பதி இடையில் பிரச்னை ஏற்பட்டது. கணவரிடம் கோபித்து கொண்டு படுக்கை அறைக்கு சென்ற சாரதா, கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார்.
ப டுக்கை அறையில் இருந்து, ஹாலில் இருந்த கணவர் மகேஷுக்கு வீடியோ காலில் அழைத்தார். நான் தற்கொலை செய்ய உள்ளேன் என்று கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர், கதவை தட்டியும் சாரதா திறக்கவில்லை. கதவை உடைத் து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, சாரதா துாக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த யஷ்வந்த்பூர் போலீசார் அங்கு சென்று, சாரதா உடலை மீட்டனர்.
'வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தான் சாரதா தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான கணவர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சாரதாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்படி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
