/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செய்திகள் சில வரிகளில் - பெங்களூரு
/
செய்திகள் சில வரிகளில் - பெங்களூரு
ADDED : பிப் 12, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடமாற்றம் கர்நாடகாவில் 129 இன்ஸ்பெக்டர், லோக் ஆயுக்தா, மாநில உளவுத்துறை, இன்டர்னல் செக்யூரிட்டி பிரிவுகளில் பணிபுரியும் 23 டி.எஸ்.பி.,க்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக ஏ.டி.ஜி.பி., சவுமேந்து முகர்ஜி உத்தரவிட்டு உள்ளார். இது குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இது, போலீஸ் துறையில் மிகப்பெரிய ஆப்பரேஷன் என கூறப்படுகிறது.
30 லட்சம் அபராதம் வசூல் பெங்களூரில் சாலை, பொது இடங்களில் குப்பை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், குப்பை கொட்டுவோரிடம் இருந்து கடந்த 3 மாதங்களில் 30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக பெங்களூரு தெற்கு மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

