ADDED : ஜூன் 21, 2025 11:17 PM
பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் மனைகள், வீடுகள் வாங்க செலுத்த வேண்டிய முன்பண தொகை பாதியாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று சுப்பராயனப்பா பாளையாவில் உள்ள 'கனிமினிகே' வீட்டுவசதி வளாகத்தில் கண்காட்சி நடந்தது. 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 200 பேர், மனைகளை முன்பதிவு செய்தனர். இதில், 125 பேருக்கு மனைகள் குறித்த கடிதம் வழங்கப்பட்டது.
பெங்களூரு, சிக்கநாயக்கனஹள்ளி, குலிவாரா கிராமத்தை சேர்ந்தவர் மாரி பசவய்யா. இவருக்கு சொந்தமான பசுவின் மடி நேற்று அறுக்கப்பட்டதில், பசு உயிரிழந்தது. முன்விரோதம் காரணமாக, குருசித்தப்பா என்பவர் செய்திருக்கலாம் என தாவரகெரே போலீசில், பசவய்யா புகார் அளித்துள்ளார்.
ஷிவமொக்காவில் இருந்து பேரணியாக வந்த 50க்கும் மேற்பட்ட பல்வேறு நிறுவனத்தை சேர்ந்த பைக் டாக்சி 'மாஜி' ஓட்டுநர்கள், நேற்று பெங்களூரு விதான் சவுதா முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 'பைக் டாக்சியை தடை செய்வதற்கு பதிலாக, உரிய விதிகளை அமல்படுத்துங்கள்' என, கோரிக்கை விடுத்தனர்.