ADDED : ஜூலை 15, 2025 04:40 AM
மங்களூரில் இன்ஸ்டாகிராமில் வந்த வீடியோவை பார்த்து, அதிலிருந்த நம்பருக்கு தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர், பணத்தை இழந்துள்ளார். வீடியோவில் குறிப்பிட்டது போல, சில ஆப்களை பதிவிறக்கம் செய்தார். இவ்வேளையில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 20.62 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், பஜ்பே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பெங்களூரில் உள்ள சொத்துகளுக்கு இ - பட்டா வழங்கும் நடைமுறையை மாநகராட்சி நிர்வாகம் மும்மரமாக செயல்படுத்தி வருகிறது. இ - பட்டாவை பெற்று தந்து இளைஞர்கள் பணம் சம்பாதிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன்படி, இ - பட்டாவை இணையம் மூலம் பெற்றுத் தந்தால், ஒரு இ - பட்டாவுக்கு 45 ரூபாய் கமிஷன் வழங்கப்படும். இது குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்ராஜ்நகர், மலை மஹாதேஸ்வரா மலை பகுதியில் கடந்த மாதம் 26ம் தேதி ஐந்து புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. பணியின்போது ரோந்துக்கு செல்லாமல் அலட்சியமாக இருந்ததாக துணை வன பாதுகாவலர் ஒய்.சக்கரபாணியை நேற்று வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே சஸ்பெண்ட் செய்தார்.
பெங்களூரு ரூரல் புறநகர் ரிங் ரோட்டில் நேற்று முன்தினம் காலையில், இரு வாலிபர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பின்புறம் வந்த கார், பைக் மீது மோதியது. இதில், பைக்கில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.