தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்


ADDED : ஜூன் 24, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 'ஜி ராம் ஜி திட்டத்தால், கர்நாடக அரசுக்கு, 3,806 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும். ஆனாலும் கிராமப்புற தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, வரும் 1 ம் தேதி முதல் மாநிலத்தில் ஜி ராம் ஜி திட்டம் அமல்படுத்தப்படும்' என, கிராம பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே அறிவித்துள்ளார்.

 'மாநில அரசின் பல துறைக ளின் டிஜிட்டல் சேவை மையமாக விளங்கும், தரவு மையத்தில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப பராமரிப்பு, பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு தரவு மைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். சில சேவைகளை பெறுவதில் மக்களுக்கு சிரமம் ஏற்படலாம்' என, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார்.

 சித்ரதுர்காவின் ரேணுகாசாமி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன், புதிய ஜாமின் மனு தாக்கல் செய்ய ஓராண்டு காலம் தனக்கு விதிக்கப்பட்ட தடையில் தளர்வு அளிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 'அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்கும் எம்.எல்.ஏ.,க்கள் வாயை மூடுங்கள்; அவர்களின் அழுத்தத்திற்கு அடிபணிய வேண்டாம்' என்று, முதல்வர் சிவகுமாருக்கு, காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

 ''பிடதி டவுன்ஷிப் பணிகளை நிறைவேற்றுவதில் விவசாயிகளுக்கு விருப்பம் இல்லை என்றால், அத்திட்டத்தை கைவிடவும் அரசு தயார்,'' என, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் அறிவித்துள்ளார்.

 பெங்களூரின் நாகசந்திராவில் வசிப்பவர் ரமேஷ். இவர், ஒன்பது நாய்களை வளர்த்தார். நாய்களை இவர் அடித்து துன்புறுத்திய வீடியோ வைரலான நிலையில், நாய்களை 'பீட்டா' அமைப்பினர் மீட்டனர். ரமேஷ் மீது வழக்குப்பதிவானது. இதுதொடர்பான மனுவை விசாரித்த கீழமை நீதிமன்றம், நாய்களை ரமேஷிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து பீட்டா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us