தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்


ADDED : ஆக 20, 2026 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மே ற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பாக, கஸ்துாரி ரங்கன் அளித்த அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், கர்நாடகாவில் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய, 20,668 சதுர கி.மீ., பரப்பளவு சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி என அறிவிக்கப்பட அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்படி அறிவிக்கப்பட்டால் விவசாயிகள், பொதுமக்களுக்கு பிரச்னை ஏற்படும் என்பதால், வரைவு அறிக்கையை நிராகரிக்க, மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என, வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி அறிவித்து உள்ளார்.

கா ல்நடை மருத்துவ அதிகாரி தேர்வில் நடந்த, முறைகேடு பற்றி விசாரிக்கும் அமலாக்கத்துறை, தேர்வுக்கு முந்தைய நாள் சில மாணவர்களுக்கு, வினாத்தாள் கொடுக்கப்பட்டதை கண்டுபிடித்துள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கர்நாடகாவின் நெலமங்களாவில் உள்ள, ரிசார்ட்டில் நேற்று சோதனை நடத்தி தகவல் சேகரித்தனர்.

'நை ஸ்' சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டாம் என்று, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் கட்ட மறுக்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. கட்டணம் செலுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

பெ ங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டின் திறந்தவெளி பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்ததாக, கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஷ்யாம் பிரசாத், தெருவோர வியாபாரிகள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை, தெருவோர வியாபார குழு பரிசீலனை செய்கிறது. பரிசீலனை முடியும் வரை, வியாபாரிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்ற கூடாது என்று நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

ஹா சன் சட்டசபை தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா, ஐந்து ஆண்டுகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கூறி, வக்கீல் சந்தீப் என்பவர் அளித்த புகாரை விசாரித்த, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபிரசாத், பிரீத்தம் கவுடா சொத்து குவித்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, ஹாசன் மாவட்ட லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us