தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில்...

 செய்திகள் சில வரிகளில்...

 செய்திகள் சில வரிகளில்...


ADDED : செப் 20, 2026 11:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2026 11:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

4 ஆண்டில் 5.65 கோடி வழக்கு

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுவது, அதிவேகம், சீட் பெல்ட் அணியாதது, வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது, சிக்னல் ஜம்ப், ஒரு வழி பாதையில் செல்வது என பலரும் பல விதங்களில் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர்.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திய பின், பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில், போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, 5.65 கோடி வழக்குகள் பதிவாகியுள்ளன. வருங்காலத்தில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போக்குவரத்து போலீஸ் துறை சட்டங்களை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.

சிறையில் 410 போன் பறிமுதல்

கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார் நேற்று கூறுகையில், ''கர்நாடகா சிறைகளில், கைதிகள் மொபைல் போன் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முன்அறிவிப்பின்றி அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. கைதிகளுக்கு மொபைல் போன்கள் வழங்க உதவி செய்யும் சிறை அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 9 மாதங்களில் நடத்திய சோதனையில், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 334 மொபைல் போன்கள் உட்பட கைதிகளிடமிருந்து 410 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன,'' என்றார்.

எம்.எல்.ஏ., ராஜினாமா மிரட்டல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், கதக் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஹெச்.கே.பாட்டீல் நேற்று கூறுகையில், ''கதக் தாலுகாவில் 49 சதவீத மழை பற்றாக்குறை இருந்த போதிலும்,

வறட்சி தாலுகா பட்டியலில் கதம் இடம்பெறவில்லை. இதற்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். கதக் தாலுகாவை வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அக்டோபர் 10ம் தேதிக்குள் மாநில அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில், அன்றைய தினமே எனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன். கதக்கில் நேரடியாக ஆய்வு செய்தும், வறட்சியால் பாதிக்கப்பட்டதாக முதல்வர் சிவகுமார் அறிவிக்கவில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us