ADDED : செப் 20, 2026 11:25 PM

உடுப்பி: காங்கிரஸ் மூத்த தலைவர் ரமாநாத் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரமாநாத் ராய், நேற்று மதியம் உடுப்பி மாவட்டம், கார்கலா நகரின் மூடுபிதரே நெடுஞ்சாலையில், சானுார் அருகில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது. மோதிய வேகத்தில், காரின் முன் பகுதி நொறுங்கியது.
இ தில் காயமடைந்த ரமாநாத் ராய், காருக்குள் சிக்கிக்கொண்டார். விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியினர், அவரை காருக்குள் இருந்து மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
கூடுதல் சிகிச்சைக்காக மங்களூரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கார் ஓட்டுநர், பலத்த காயமடைந்து, மரு த்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணியர் பலரும் காயமடைந்தனர்.
