தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்


ADDED : செப் 23, 2026 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 02:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்ஜாமின் துமகூரு ரூரல் தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., சுரேஷ்கவுடா. இவரது மகள் ஐஸ்வர்யா, 36. இவர் ஆகஸ்ட் 12ம் தேதி, மாண்டியாவின் உக்கடா கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது, பணியில் இருந்த எஸ்.ஐ., சவிதாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், சவிதாவின் கன்னத்தில் ஐஸ்வர்யா அறைந்தார். சவிதா அளித்த புகாரில் ஐஸ்வர்யா மீது கியாதனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு அவர் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐஸ்வர்யா மன்னிப்பு கேட்டால், மனுவை பரிசீலிக்கலாம் என வாய்மொழியாக கூறியது. இந்நிலையில், ஐஸ்வர்யா மன்னிப்பு கேட்டு நேற்று வீடியோ வெளியிட்டார். இதையடுத்து, அவருக்கு நேற்று முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இரட்டிப்பு கட்டணம் பெங்களூரு எம்.ஜி., ரோடு பகுதியில் ஒரு மணி நேரம் பைக் நிறுத்த 15 ரூபாய், கார் நிறுத்த 30 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என, பெங்., சென்ட்ரல் மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறி எஸ்.கே., இன்போடேக் என்ற நிறுவனம் செயல்படுவதாக புகார் எழுந்தது.

அதாவது, ஒரு மணி நேரம் பைக் நிறுத்த 30 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த தனியார் நிறுவனம் வசமே பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தம் 2028 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் பட்டா பெங்களூரில் வசிப்போர், தங்கள் சொத்து பத்திரங்களில் உள்ள பெயர் பிழைகள் உள்ளிட்ட திருத்தங்களை 'ஆன்லைனில்' மேற்கொள்ளும் வகையிலான, 'இ - ஆஸ்தி 2.0' இணையதளத்தை பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா நேற்று வெளியிட்டார். இதன் மூலம் பத்திரங்களில், திருத்தங்கள் மேற்கொள்ள இடைத்தரகர்கள், அரசு அலுவலங்களுக்கு அலைய தேவையில்லை என அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார். வரும் 28ம் தேதி முதல் புதிய பட்டாவை இணையத்தில் பெறும் சேவை அறிமுகமாகும் என தெரிவித்தார்.

வரைவு மட்டுமே மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் உடையார் நேற்று கூறுகையில், ''கஸ்துாரி ரங்கன் வரைவு அறிக்கை மட்டுமே. அதன் சாதக பாதகங்களை விவாதிப்போம். குடகில், 53 முதல் 55 கிராமங்கள் இதன் வரம்புக்குள் வருகிறது. 57 ஆயிரம் சதுர கி.மீ., பரப்பளவுள்ள உணர்திறன் மண்டலத்தில், 20 ஆயிரம் சதுர கி.மீ., பகுதி, நம் மாநிலத்திற்குள் வருகிறது. இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. அதற்கு மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியம்,'' என்றார்.

சுக்ரீவனுக்கு பயிற்சி மைசூரு தசராவுக்கு வந்துள்ள யானைகளில், சுக்ரீவனுக்கு, 600 கிலோ எடை கொண்ட மணல் மூட்டை சுமக்கும் பயிற்சி நேற்று நடந்தது. மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து சாமராஜ உடையார் சதுக்கம், கே.ஆர்., சதுக்கம், சாயாஜிராவ் சாலை, ஆயுர்வேதம் சதுக்கம், ஹைவே சதுக்கம் வழியாக பன்னி மண்டபம் வரையுள்ள 5 கி.மீ., நீளமுள்ள பாதையை, ஒரு மணி நேரம் 25 நிமிடங்களில் சென்றடைந்தது.

விவசாயி தற்கொலை சிக்கபல்லாபூரை சேர்ந்தவர் பால் உற்பத்தி விவசாயி ராமாஞ்சினப்பா. இவர், மாவட்ட விவசாயிகள் சங்க தாலுகா தலைவராக உள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன், தன்னிடம் இருந்த 35 சென்ட் நிலத்தை, ரவீந்திர ரெட்டி என்பவருக்கு 77 லட்சம் ரூபாய்க்கு விற்றார். ரவீந்திர ரெட்டியும் 57.50 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டார்.

ஆனால், மீதமுள்ள 19.50 லட்சம் ரூபாயை கொடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் விரக்தியடைந்த ராமாஞ்சினப்பா, நேற்று விவசாயிகள் சங்க அலுவலகத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிக்கபல்லாபூர் நகர போலீசார் விசாரிக்கின்றனர்.

ஸ்ரீரங்கபட்டணா தசரா மாண்டியா மாவட்டம் 'ஸ்ரீ ரங்கபட்டணா தசரா' அக்., 15 முதல் 18 ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவை துவக்கி வைக்க வேண்டும் என்று பெங்களூரில் நடிகர் ரவிச்சந்திரனை, மாண்டியா மாவட்ட கலெக்டர் குமார், ஸ்ரீரங்கபட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பாபு பண்டி சித்தேகவுடா ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us