தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கஸ்துாரிரங்கன் அறிக்கை தொடர்பான வரைவு அறிவிப்பு 'அப்படியே ஏற்க முடியாது' என சட்டசபையில் தீர்மானம்

 கஸ்துாரிரங்கன் அறிக்கை தொடர்பான வரைவு அறிவிப்பு 'அப்படியே ஏற்க முடியாது' என சட்டசபையில் தீர்மானம்

 கஸ்துாரிரங்கன் அறிக்கை தொடர்பான வரைவு அறிவிப்பு 'அப்படியே ஏற்க முடியாது' என சட்டசபையில் தீர்மானம்

1


ADDED : செப் 23, 2026 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 02:56 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாப்பது தொடர்பான, கஸ்துாரிரங்கன் அறிக்கை தொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட வரைவு அறிவிப்பை அப்படியே ஏற்க முடியாது' என, கர்நாடக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் துவங்கி, தமிழகத்தின் கன்னியாகுமரி வரை மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறது. இந்த மலையை பாதுகாப்பது தொடர்பாக, 'இஸ்ரோ' எனும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்துாரிரங்கன் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், கர்நாடகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வரும் 10 மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதுபற்றி விவாதிக்க கர்நாடக சட்டசபையில் நேற்று முன்தினம் சிறப்பு விவாதம் துவங்கியது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அனைத்து கட்சி உறுப்பினர்கள் பேசினர். கேரளாவை போன்று நேரடியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

7 லட்சம் மக்கள் நேற்று 2வது நாளாக விவாதம் தொடர்ந்தது. சில உறுப்பினர்கள் பேசுகையில், 'அறிக்கையை அப்படியே நிராகரிக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. விவசாயிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்' என்றனர்.

துணை சபாநாயகர் மங்கள் வைத்யா பேசுகையில், ''கஸ்துாரிரங்கன் அறிக்கையை நாம் ஏற்க கூடாது. அப்படி ஏற்றால் எனது சொந்த ஊரான உத்தர கன்னடா மாவட்டத்தில், 7 லட்சம் மக்கள் வீடுகள், உடைமைகளை இழப்பர்,'' என்றார்.

அனைத்து உறுப்பினர்களும் பேசிய பின், கஸ்துாரிரங்கன் அறிக்கை தொடர்பாக, மத்திய அரசு வெளி யிட்ட வரைவு அறிவிப்பை அப்படியே ஏற்க முடியாது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்ததால் ஒருமனதாக நிறைவேறியது.

வருவாய் துறை பின், முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளை கேட்ட பின், கேரளா மாதிரியில் கள ஆய்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணியை வருவாய் துறை மேற்கொள்ளும். இதற்காக ஓராண்டு கால அவகாசம் வழங்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் உள்ள அம்சங்களை நிறைவேற்றும் போது, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்போம். அறிவிக்கப்பட்ட வனப்பகுதிகள், சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும்.

விவசாய நிலங்கள், குடியிருப்புகளை சேர்க்க கூடாது. அறிக்கையில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து தேவையான மாற்றங்களை பரிந்துரை செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்.

இந்த குழுவில் வருவாய் அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் இருப்பர். பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, அனைத்து கட்சி குழுவை அனுப்பி வைப்போம். கஸ்துாரிரங்கன் அறிக்கையை செயல்படுத்திய பிறகு, இறுதி அறிவி ப்பு வெளியிடுவது குறித்து முடிவு எடுக்குமாறு, மத்திய அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதாக, எனக்கு சிலரிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. எங்கள் தரப்பு நியாயத்தை உச்ச நீதிமன்றத்தில் முன்வைப்போம். வழக்கில் வாதாட மூத்த வக்கீல் நியமிக்கப்படுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us