தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்

 செய்திகள் சில வரிகளில்


ADDED : செப் 26, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லோக் ஆயுக்தாவில் புகார் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் பேசிய, கர்நாடக கலால் துறை அமைச்சர் சிவலிங்கேகவுடா மீது, பெங்களூரு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, லோக் ஆயுக்தாவில் நேற்று புகார் செய்தார்.

மனு விசாரணைக்கு ஏற்பு மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., தேர்தலின் போது, தாக்கல் செய்த வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்துள்ளார். அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மைசூரு சமூக ஆர்வலர் ஆதிஷ் சாகர் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிமன்றம் எம்.எல்.ஏ.,வுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையை அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வழக்கு தள்ளுபடி பெலகாவியின் அதானியை சேர்ந்தவர் இம்தியாஸ் சின்சாலி. இவர் தனது கடைக்கு முன், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இரும்பு தடுப்பு கம்பி வைத்திருந்தார். இதை அகற்ற கூறியவரை திட்டினார். அப்போது பிரதமர் மோடியை பற்றியும் சில கருத்துகளை கூறினார். இதுகுறித்து சமூக ஆர்வலர் கிரிஷ் அளித்த புகாரில், இம்தியாஸ் மீது பிரிவு 352 பொது அமைதியை கெடுக்கும் நோக்கில் செயல்படும் பிரிவில் வழக்கு பதிவானது.

வழக்கை ரத்து செய்ய கேட்டு இம்தியாஸ் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளை நீதிபதி வெங்கடேஷ் நாயக் விசாரித்தார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், மனுதாரர் தனிப்பட்ட முறையில் யாரையும், அவதுாறாக பேசவில்லை என்று கூறி, அவர் மீதான வழக்கை நீதிபதி நேற்று தள்ளுபடி செய்தார்.

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகருக்கு சம்மன் தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகா இரகோடி கிராமத்தில் வசித்தவர் அப்துல் ரகுமான். இவர் கடந்த ஆண்டு மே 25ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக, ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் பிரபாகர் கல்லட்கா பட்டிற்கு, விசாரணைக்கு ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us