தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்


ADDED : நவ 20, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மாநிலம் முழுதும் பல்வேறு பெயர்களில் பொதுமக்களுக்கு சேவையாற்றி வந்த, ‘பெங்களூரு ஒன்’, ‘கர்நாடகா ஒன்’, ‘கிராமம் ஒன்’ சேவை மையங்களுக்கு, ‘பிரஜா சேவா கேந்திரா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொது சேவைகள் வழங்குவதில் சீரான தன்மையையும், தெளிவையும் கொண்டுவரும் நோக்கில், முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஷிவமொக்கா: ஷிவமொக்காவில் ரவுடி பட்டியலில் உள்ள ரவுடி சமீரை, கைது செய்ய பெங்களூரு சி.சி.பி., போலீசார் சென்றனர். தன்னிடம் இருந்த கத்தியால் தன்னை தானே குத்தி கொண்டார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து, காயமடைந்த பகுதியில் தையல் போட்டு, போலீசார் பெங்களூரு அழைத்து வந்தனர்.

டில்லி: ‘ எத்தனால் கலந்த பெட்ரோல், டீசலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எத்தனாலுக்கு எதிராக பணம் கொடுத்து பிரசாரம் செய்கின்றனர்’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

உடுப்பி: நான்கு ஆண்டுகளுக்கு முன் வேண்டி கொண்ட நேர்த்தி கடன் செலுத்துவதற்காக, உடுப்பி மாவட்டம் கொல்லுார் மூகாம்பிகை கோவிலில் மத்திய அமைச்சர் குமாரசாமி, தனது குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்ததுடன், நவ சண்டி யாகத்தில் பங்கேற்றார்.

பெங்களூரு: கால்நடை மருத்துவர் தேர்வு முறைகேடு வழக்கில், கே.பி.எஸ்.சி., முன்னாள் உறுப்பினர் கீதாவை கைது செய்த எஸ்.ஐ.டி., அதிகாரிகள், பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us