தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கிரைம் கார்னர்: பெங்களூரு

கிரைம் கார்னர்: பெங்களூரு

கிரைம் கார்னர்: பெங்களூரு


ADDED : நவ 20, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* மூவர் உயிரிழப்பு

கலபுரகி ஆலந்த் தாலுகாவின் பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்த பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கில் இருந்த ஸ்ரீகாந்த், 25, குருநாத், 26, சசிகாந்த், 25, உயிரிழந்தனர்.

இரட்டையர்கள் சாவு



தாவணகெரே நகரின், பட்லகட்டே கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவராஜ், 22, தேவராஜ், 22, இரட்டையர்களான இவர்கள், நேற்று மதியம் ஹதடி கிராமத்தின் ஏரிக்கரையில், ஆடுகளுக்கு தண்ணீர் புகட்ட சென்ற போது, ஒருவர் தவறி நீரில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயற்சித்தவரும் நீரில் மூழ்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

பாட்டியை கொன்ற பேரன் கைது



பெலகாவி, ஹுக்கேரியின் அரளிகட்டே கிராமத்தை சேரந்தவர் ஹம்மவ்வா, 78. இவர் நவம்பர் 10ம் தேதி, சந்தைக்கு சென்றவர் காணாமல் போனார். நவம்பர் 15ல், ஜினராளா கிராமத்தின் அருகில் உள்ள கட்டப்பிரபா அணையில் கோணிப்பையில் ஹம்மவ்வாவின் உடல் மிதந்தது.

விசாரணையில், பேரன் பீமப்பா சனதி, 20, கொலையாளி என்பது தெரிந்தது. ஹம்மவ்வா சேர்த்து வைத்திருந்த கிரஹலட்சுமி பணத்தை கொடுக்காததால், பைக்கில் பாட்டியை அழைத்து சென்ற பீமப்பா, அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்து, இரண்டு தங்கச்செயின்கள், 2,300 ரூபாயை திருடிக்கொண்டு, உடலை கோணிப்பையில் போட்டு அணையில் வீசினார். இது பற்றி தன் தந்தை ராமப்பாவிடம் கூறினார். மகனை காட்டி கொடுக்காமல் தந்தை மூடி மறைத்தார். எனவே தந்தை, மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us