பெங்., மத்திய குற்றப்பிரிவு ரவுடி ஒழிப்பு படையாகிறது
பெங்., மத்திய குற்றப்பிரிவு ரவுடி ஒழிப்பு படையாகிறது
UPDATED : நவ 20, 2026 12:12 AM
ADDED : நவ 20, 2026 12:10 AM
பெங்களூரு: பெங்களூரு சி.சி.பி., பெயர் மாற்றப்பட்டுள்ளது. இனி ரவுடி ஒழிப்பு படையாக செயல்படும்.
பெங்களூரில் சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் பிரிவு உள்ளது. ஆள் கடத்தலை தடுப்பது, போதை பொருள் விற்பனையை தடுப்பது, ரவுடிகள் வீடுகளில் சோதனை நடத்துவது உள்ளிட்ட பணிகளை சி.சி.பி., பிரிவு மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் சி.சி.பி.,யின் பெயரை ரவுடி ஒழிப்பு படை என்று மாற்றி அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன் தலைவராக மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் நிம்பால்கர் செயல்பட உள்ளார்.
கடந்த 1971ம் ஆண்டு கர்நாடக அரசு சிறப்பு படை உருவாக்கியது. இதன் தலைவராக ஏ.சி.பி., இருந்தார். 1993ல் சிறப்பு படை, சி.சி.பி.,யாக மாறியது. டி.சி.பி., தலைவராக செயல்பட்டார். 2021ல் பெங்களூரில் ஆறு சி.சி.பி., அலுவலகங்கள் அமைக்கப்பட்ட நிலையில், 2024 ல் சி.சி.பி.,க்கு போலீஸ் நிலைய அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
