/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்கம் பசவேஸ்வர நகரில் துவக்கம்
/
நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்கம் பசவேஸ்வர நகரில் துவக்கம்
நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்கம் பசவேஸ்வர நகரில் துவக்கம்
நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்கம் பசவேஸ்வர நகரில் துவக்கம்
ADDED : டிச 02, 2025 04:24 AM

பசவேஸ்வர நகர்: கர்நாடக பத்திரிகை வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, பசவேஸ்வர நகர் நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்கம் ஒருங்கிணைப்பில், பசவேஸ்வர நகர் சங்க துவக்கம் மற்றும் கன்னட ராஜ்யோத்சவா விழா நடந்தது.
பெங்களூரின் மஹாலட்சுமி புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், நடந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் பெயர்ப்பலகையை முன்னாள் துணை மேயர் ஹரிஷ் திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், ''நாளிதழ் வினியோகஸ்தர்களுக்கு, தேவையான சலுகைகள் அளிக்கப்படும். நாங்கள் எப்போதும், நாளிதழ் வினியோகஸ்தர்களுடன் இருப்போம். இவர்கள் ஒற்றுமையாக இருந்து, சலுகைகளை பெற வேண்டும்,'' என்றார்.
இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் கூட்டமைப்பு தலைவர் மல்லிகார்ஜுன் பேசுகையில், ''நாளிதழ் வினியோகஸ்தர்கள், வீட்டு வசதி திட்டம், மருத்துவ நல நிதிக்காக, மாதந்தோறும் பணம் சேமியுங்கள்,'' என்றார்.
கர்நாடக நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஷம்புலிங்கா பேசுகையில், ''மாநிலத்தின் எந்த பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர் இறந்தாலும், அவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
70 வயதுக்கு மேற்பட்ட நாளிதழ் வினியோகஸ்தருக்கு பென்ஷன் வசதி செய்ய வேண்டும்,'' என்றார்.
மாநில நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்க துணைத்தலைவர் பிரசாந்த் குமார், பொது செயலர் சங்கம் சுரேஷ், செயலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

