/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிள்ளைகளின் உயர் கல்விக்கு நிதியுதவி நாளிதழ் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்
/
பிள்ளைகளின் உயர் கல்விக்கு நிதியுதவி நாளிதழ் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்
பிள்ளைகளின் உயர் கல்விக்கு நிதியுதவி நாளிதழ் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்
பிள்ளைகளின் உயர் கல்விக்கு நிதியுதவி நாளிதழ் விநியோகஸ்தர்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2025 04:49 AM

மெஜஸ்டிக்:நாளிதழ் விநியோகஸ்தர்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்கு, வட்டியில்லா கடன் உதவி உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு கர்நாடக மாநில பத்திரிகை விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளிதழ் விநியோகஸ்தர்கள் தினமான நேற்று, பெங்களூரு மெஜஸ்டிக்கில், நாளிதழை வீடு வீடாக, கடைகளுக்கு விநியோகிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை, நாளிதழ் விநியோகஸ்தர்கள் சால்வை அணிவித்து, கவுரவித்தனர்.
தொடர்ந்து, கர்நாடக மாநில நாளிதழ் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
கடுமையான நிதி நெருக்கடியில் பணிபுரியும் பத்திரிகை விநியோகஸ்தர்களை, அரசோ, அமைப்போ, சங்கங்களோ கவனிப்பதில்லை.
கடந்த 2018ல் சித்தராமையா முதல்வராக இருந்தபோது, நாளிதழ் விநியோகஸ்தர்களை அடையாளம் கண்டு, இரண்டு கோடி ரூபாய்க்கு நல நிதியை ஒதுக்கினார். அதை நிதித்துறை அங்கீகரிக்கவில்லை.
அவருக்கு பின் வந்த அரசும், எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த சித்தராமையா, பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து நிறைவேற்றி உள்ளார். ஆனால் விநியோகஸ்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறிவிட்டது.
l விநியோகஸ்தர்களுக்கு 10 கோடி ரூபாயில் நல நிதி உருவாக்குவது
l 70 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் நாளிதழ் விநியோகஸ்தர்களுக்கு மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவது
l காற்று மாசுபாட்டை தடுக்க சலுகை விலையில் மின்சார இரு சக்கர வாகனம் வழங்குவது
l பிள்ளைகளின் உயர் கல்விக்கு வட்டியில்லா நிதியுதவி வழங்குவது
l அரசு வீட்டு வசதி திட்டங்களில், விநியோகஸ்தர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு
l செய்தித்தாள்களை விநியோகிக்கும்போது விபத்து ஏற்பட்டால், இலவச சிகிச்சை, இழப்பீடு
l விபத்தில் மரணம் ஏற்பட்டால், அவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி
l பத்திரிகை நிறுவனங்களின் உதவியுடன் இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., வசதி வழங்குவது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
நாளிதழ் விநியோகஸ்தர்கள் தினமான நேற்று, பெங்களூரு மெஜஸ்டிக்கில், நாளிதழ்களை வீடு வீடாக, கடைகளுக்கு விநியோகிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை, நாளிதழ் விநியோகஸ்தர்கள் சால்வை அணிவித்து, கவுரவித்தனர்.