/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடுத்த 'டார்க்கெட்' சதீஷ் ஜார்கிஹோளி 'மாஜி' அமைச்சர் ராஜு கவுடா கருத்து
/
அடுத்த 'டார்க்கெட்' சதீஷ் ஜார்கிஹோளி 'மாஜி' அமைச்சர் ராஜு கவுடா கருத்து
அடுத்த 'டார்க்கெட்' சதீஷ் ஜார்கிஹோளி 'மாஜி' அமைச்சர் ராஜு கவுடா கருத்து
அடுத்த 'டார்க்கெட்' சதீஷ் ஜார்கிஹோளி 'மாஜி' அமைச்சர் ராஜு கவுடா கருத்து
ADDED : ஆக 12, 2025 11:23 PM

யாத்கிர்:''அமைச்சர் பதவியில் இருந்து ராஜண்ணாவை நீக்கியதன் பின்னணியில், காங்கிரசின் பெரிய தலைவரின் பங்களிப்பு உள்ளது. அடுத்த 'டார்க்கெட்' அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியாக இருக்கக் கூடும்,'' என பா.ஜ., முன்னாள் அமைச்சர் ராஜு கவுடா தெரிவித்தார்.
யாத்கிரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வால்மீகி சமுதாயத்தின் செல்வாக்குமிக்க தலைவர்களை, அரசியல் ரீதியில் ஒழித்துக் கட்ட முயற்சி நடக்கிறது. எங்கள் சமுதாயத்தில் நாங்கள் பிறக்கும் போதே தலைவர்கள். எங்களில் ஒருவர் மட்டுமே தலைவராக வேண்டும் என்பது இல்லை. ராஜண்ணாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியதால், அதே சமுதாயத்தை சேர்ந்தவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
எங்கள் சமுதாயத்தினரிடம் ஒற்றுமை இல்லை. இதே காரணத்தால் ரமேஷ் ஜார்கிஹோளியை ஓரங்கட்டினர். அதன்பின் நாகேந்திராவுக்கு அமைச்சர் பதவி பறிபோனது. இப்போது ராஜண்ணாவுக்கும் அதுவே நடந்துள்ளது. வரும் நாட்களில் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை 'டார்க்கெட்' செய்யக்கூடும்.
காங்கிரசில் உள்ள 15 வால்மீகி சமுதாய எம்.எல்.ஏ.,க்கள், ராஜண்ணாவுக்கு ஆதரவாக பேசினால், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும். முதல்வர் ஆசைக்காக எங்கள் சமுதாயமே, அவரை, 'பலி' கொடுத்துள்ளது. சில நாட்கள் கடந்த பின், அவரை சமாதானம் செய்வர். அவர் சமாதானம் அடைந்தால், அவரது அரசியல் அத்தியாயம் முடிந்து போகும்.
சதீஷ் ஜார்கிஹோளி தலைமையில், வால்மீகி சமுதாய எம்.எல்.ஏ.,க்கள், ராஜண்ணாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வேண்டும். அப்படி நடந்தால் அவரது அரசியல் தொடரும். ஆனால் அந்த ஒற்றுமை, வால்மீகி சமுதாயத்திடம் இல்லை. இவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில், பெரிய தலைவரின் பங்களிப்பு உள்ளது.
ராஜண்ணாவை எந்த கட்சி யும் வேண்டாம் என, மறுக்காது. மூன்று, நான்கு தொகுதிகளில் அவருக்கு செல்வாக்கு உள்ளது. அவர் சாதாரண தலைவர் அல்ல. எனவே அவரை ஒழித்துக்கட்ட முயற்சி நடக்கிறது. இதற்கு முன்பு 'ஹனி ட்ராப்'பில் சிக்கவைக்க முயற்சித்தனர். அதில் இருந்து அவர் தப்பினார் .
இவ்வாறு அவர் கூறினார்.