மெட்ரோ நீல நிற வழித்தடத்தில் அடுத்த ஆண்டு ரயில் சேவை
மெட்ரோ நீல நிற வழித்தடத்தில் அடுத்த ஆண்டு ரயில் சேவை
ADDED : ஆக 16, 2026 11:07 PM
பெங்களூரு: 'அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள், மெட்ரோ நீல நிற வழித்தடத்தில் ரயில் சேவை துவங்கும்' என, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் சில்க் போர்டு முதல், கே.ஆர்., புரம் வரையிலான மெட்ரோ ரயில் நீல நிற வழித்தடத்தில், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் ரயில் சேவை துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், மாரத்தஹள்ளி மற்றும் சில்க் போர்டு பகுதிகளில் இன்னும் பணிகள் முடிவடையாமல் உள்ளன. மேலும், பையப்பனஹள்ளிபணி மனையில் பணிகள் முடிவடையவில்லை.
இதனால், டிசம்பர் மாதத்திற்குள் ரயில் சேவை துவங்க வாய்ப்பில்லை. இதனால், விரைவில் நீல நிற வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்த பெங்., மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மேலும், 2027ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை, பயணியர் பயன்பாட்டுக்கு வரும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்து உள்ளது.
