/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சர்வீஸ் சாலையை மூடிய என்.எச்.ஏ.,
/
சர்வீஸ் சாலையை மூடிய என்.எச்.ஏ.,
ADDED : பிப் 08, 2025 06:33 AM
பெங்களூரு: பெங்களூரு - மைசூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில், சுங்கவரி செலுத்தாமல் தப்பிச் செல்லும் வாகன ஓட்டியருக்கு, என்.எச்.ஏ., எனும் தேசிய நெடுஞ்சாலை வாரியம் 'ஷாக்' கொடுத்துள்ளது.
மைசூரில் இருந்து பெங்களூருக்கு செல்லும் வாகன ஓட்டிகள், பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது சுங்கவரி செலுத்த வேண்டும்.
வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கும் நோக்கில், நெடுஞ்சாலை வழியாக செல்லாமல், சர்வீஸ் சாலை வழியாக பெரும்பாலானோர் சென்று வந்தனர்.
இதை கவனித்த என்.எச்.ஏ., ராம்நகர் பிடதி அருகில் உள்ள சர்வீஸ் சாலையை மூடியுள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் இருந்து, சர்வீஸ் சாலைக்கு இருந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் இனி, பிடதி அருகில் சேஷகிரிஹள்ளி சுங்கச்சாவடியில், சுங்கவரி செலுத்தி விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
'முன்னறிவிப்பு இன்றி, சர்வீஸ் சாலையை மூடியது சரியல்ல. ராம்நகரில் இருந்து பெங்களூருக்கு செல்லவும், அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது' என, புலம்புகின்றனர்.