/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பயங்கரவாதி ஜுனைத் அகமதுவின் நண்பரை கைது செய்தது என்.ஐ.ஏ.,
/
பயங்கரவாதி ஜுனைத் அகமதுவின் நண்பரை கைது செய்தது என்.ஐ.ஏ.,
பயங்கரவாதி ஜுனைத் அகமதுவின் நண்பரை கைது செய்தது என்.ஐ.ஏ.,
பயங்கரவாதி ஜுனைத் அகமதுவின் நண்பரை கைது செய்தது என்.ஐ.ஏ.,
ADDED : பிப் 22, 2026 05:29 AM

பெங்களூரு: தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட பயங்கரவாதியின் நண்பரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.
மங்களூரில், 2022ம் ஆண்டு ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்த வழக்கு மற்றும் பெங்களூரில் நாச வேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய வழக்கில், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமதுவை தேடப்படும் குற்றவாளி என்று, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது. அவரை பற்றிய தகவல் கொடுப்போருக்கு ஐந்து லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஜுனைத் அகமதுவின் நண்பரான அர்ஷத் கான், 30 என்பவரை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
கடந்த, 2023ல், பெங்களூரு ஆர்.டி.நகர் சுல்தான்பாளையாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து, ஏழு நாட்டு துப்பாக்கிகள், 45 துப்பாக்கி குண்டுகள், நான்கு வாக்கி டாக்கிகள், இரண்டு சாட்டிலைட் போன்கள், ஒரு கத்தி, 12 மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக, நாசவேலையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் அர்ஷத் கானும் ஒருவர். ஜாமினில் வெளியே வந்த அவர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது கைதாகி உள்ளார்.

