/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.2.30 கோடி போதை பறிமுதல் பெங்களூரில் நைஜீரியர் கைது
/
ரூ.2.30 கோடி போதை பறிமுதல் பெங்களூரில் நைஜீரியர் கைது
ரூ.2.30 கோடி போதை பறிமுதல் பெங்களூரில் நைஜீரியர் கைது
ரூ.2.30 கோடி போதை பறிமுதல் பெங்களூரில் நைஜீரியர் கைது
ADDED : செப் 03, 2025 05:42 AM

பாகலுார் : பெங்களூரில் போதைப் பொருள் விற்பனை செய்த, நைஜீரியா நாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 2.30 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, பாகலுார் சந்தே சதுக்கம் - சி.எம்.ஆர்., கல்லுாரிக்கு இடைப்பட்ட பகுதியில், நேற்று முன்தினம் இரவு பாகலுார் போலீசார் ரோந்து சென்றனர்.
சந்தேகம்படும்படியாக ஸ்கூட்டரில் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
ஸ்கூட்டர் டிக்கியை திறந்து பார்த்தபோது, ஒரு பைக்குள் எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள், எடை இயந்திரம் இருந்தது. எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள், 159 கிராம் இருந்தது.
சர்வதேச சந்தையில் மதிப்பு 2.30 கோடி ரூபாய். போதைப் பொருள், ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அவர் நைஜீரியா நாட்டின் சிகோஜி ஹெடாஹா, 38, என்பது தெரிந்தது. 2011ம் ஆண்டு வணிக விசாவில் இந்தியா வந்த சிகோஜி, விசா காலாவதி ஆன பிறகும், தன் நாட்டிற்கு திரும்பாமல், பெங்களூரில் சட்டவிரோதமாக வசித்ததுடன், போதைப் பொருள் விற்று வருவது தெரிய வந்தது.
அவர் மீது வழக்குப்பதிவு செய்த பாகலுார் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வெளிநாட்டினர் தடுப்பு காவல் மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.