தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தடுப்பு காவல் மையத்தில் போலீசை தாக்கிய நைஜீரியர் மீது வழக்கு

தடுப்பு காவல் மையத்தில் போலீசை தாக்கிய நைஜீரியர் மீது வழக்கு

தடுப்பு காவல் மையத்தில் போலீசை தாக்கிய நைஜீரியர் மீது வழக்கு


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 09:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 09:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாதநாயக்கனஹள்ளி: தடுப்பு காவல் மையத்தில் போலீசை தாக்கிய, நைஜீரியர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கெல்வின் ஜேம்ஸ், 36. இவர், 2022ம் ஆண்டு சுற்றுலா விசாவில் பெங்களூரு வந்தார். விசா காலம் முடிந்தும், தனது நாட்டிற்கு செல்லாமல், சட்ட விரோதமாக வசித்ததுடன், போதை பொருள் விற்பனையிலும் ஈடுபட்டார்.

அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, பெங்களூரு ரூரல் கொண்டேகொப்பாவில் உள்ள, வெளிநாட்டினர் தடுப்பு காவல் மையத்தில் அடைத்தனர்.

இந்நிலையில், போதை பொருள் விற்ற வழக்கில்,கெல்வினுக்கு, நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. நேற்று முன்தினம் இரவு, தடுப்பு காவல் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம், ‘எனக்கு தான் ஜாமின் கிடைத்து விட்டதே; இங்கிருந்து வெளியே விடுங்கள்’ என கூறியுள்ளார்.

‘ஜாமின் கிடைத்தாலும், சட்ட விரோதமாக இங்கு வசித்ததற்காக, அடைத்து வைத்து உள்ளோம்’ என, போலீசார் கூறியதை கேட்டு கோபம் அடைந்த, கெல்வின், நான்கு போலீசாரை தாக்கினார்.

இதுகுறித்த புகாரின்படி, மாதநாயக்கனஹள்ளி போலீசார், கெல்வின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us