/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.1.20 கோடி போதை பறிமுதல் நைஜீரிய வாலிபர் கைது
/
ரூ.1.20 கோடி போதை பறிமுதல் நைஜீரிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 17, 2025 11:00 PM

ஆவலஹள்ளி: பெங்களூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.20 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, ஆவலஹள்ளியில் ஒரு வீட்டில் போதை பொருள் விற்பனை நடப்பதாக, சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு நேற்று அதிகாலை 2:00 மணிக்கு போலீசார் சென்றனர்.
வீட்டில் சோதனை நடத்தினர். சமையல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, பிளாஸ்டிக் கவரை எடுத்து பார்த்தபோது அதற்குள் எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள் இருந்தது. 600 கிராம் எடை கொண்ட அதன் சர்வதேச சந்தை மதிப்பு 1.20 கோடி ரூபாய்.
போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்த, மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவை சேர்ந்த சிக்வுமா, 35, என்பவர் கைது செய்யப்பட்டார். பிற மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு, போதை பொருளை வாங்கி வந்து, கல்லுாரி மாணவர்கள், பார்ட்டிகளுக்கு அதிக விலைக்கு விற்றதும், தொழில் விசாவில் வந்து இங்கு தங்கி இருப்பதும் தெரியவந்தது.
சிக்வுமா மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது.