/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பல்லாரி கலவர வழக்கு ரெட்டிக்கு நிதின் தைரியம்
/
பல்லாரி கலவர வழக்கு ரெட்டிக்கு நிதின் தைரியம்
ADDED : ஜன 13, 2026 04:57 AM

பல்லாரி: பல்லாரி கலவர வழக்கு தொடர்பாக, பா.ஜ., -- எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டியுடன், அக்கட்சியின் தேசிய செ யல் தலைவர் நிதின் நபின், மொபைல் போனில் நேற்று பேசினார்.
பல்லாரியில் கடந்த, 1ம் தேதி இரவு பேனரை அகற்றிய விவகாரத்தில், காங்கிரஸ் -- பா.ஜ., தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தனியார் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து, காங்கிரஸ் தொண்டரான ராஜசேகர் ரெட்டி என்பவர் இறந்தார்.
இவ்வழக்கை சி.ஐ.டி., விசாரிக்கிறது. கலவரம் தொடர்பாக கங்காவதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
இந்நிலையில், பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின், ஜனார்த்தன ரெட்டியிடம் நேற்று மொபைல் போனில் பேசினார். பல்லாரி கலவரம் தொடர்பாக அனைத்து தகவல்களை யும் கேட்டறிந்தார். 'சாதாரண விஷயம் இல்லை. இதற்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும். மாநில பா.ஜ., தலைவர்களுடன் ஆ லோசித்து பாதயாத்திரையா அல்லது போராட்டமா என்று முடிவு எடுங்கள். கட்சி உங்களுடன் இருக்கும்' என்று, நம்பிக்கை தெரிவித்தார்.

