தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசின் வாக்குறுதி திட்டங்களால் வளர்ச்சி பணிகளுக்கு நிதி இல்லையா? முதல்வர் சித்தராமையா மறுப்பு

 அரசின் வாக்குறுதி திட்டங்களால் வளர்ச்சி பணிகளுக்கு நிதி இல்லையா? முதல்வர் சித்தராமையா மறுப்பு

 அரசின் வாக்குறுதி திட்டங்களால் வளர்ச்சி பணிகளுக்கு நிதி இல்லையா? முதல்வர் சித்தராமையா மறுப்பு


ADDED : மார் 15, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 06:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகல்கோட்: ''காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசே நேரடி பொறுப்பு; ஐந்து வாக்குறுதி திட்டங்களால் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியவில்லை என, பா.ஜ., பொய் பிரசாரம் செய்கிறது,'' என, முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

பாகல்கோட்டில் மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கட்ட, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் நேற்று பூமி பூஜை செய்தனர் .

பின், சித்தராமையா பேசியதாவது:

பொய் பிரசாரம் பாகல்கோட் எம்.எல்.ஏ.,வாக இருந்த ஹெச்.ஒய்.மேட்டி மரணம் அடைந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைய ஒவ்வொரு நாளும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவர் நல்ல மனிதர். பாகல்கோட்டில் மருத்துவ கல்லுாரி வர வேண்டும் என்பதில், மேட்டி உறுதியாக இருந்தார்.

இப்போது பூமி பூஜை செய்துள்ளோம். ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மருத்துவ கல்லுாரி துவங்குவதே அரசின் நோக்கம். அடுத்த ஆண்டு பாகல்கோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவ நடவடிக்கை எடுப்போம்.

வாக்குறுதி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதால், வளர்ச்சி பணிகளுக்கு அரசால் நிதி ஒதுக்க முடியவில்லை என்று, பா.ஜ., தலைவர்கள் மக்களிடம் பொய் பிரசாரம் செய்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் 50,000 கோடி ரூபாய் வாக்குறுதி திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறது. இதுவரை, 1.22 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளோம். வடமாவட்டங்களை நிலையான வளர்ச்சி அடையச் செய்வது என, உறுதி பூண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அரசே பொறுப்பு முன்னதாக நவநகர் ஹெலிபேடில், சித்த ராமையா அளித்த பேட்டி:

கிருஷ்ணா மேலணை திட்டத்திற்காக மத்திய அரசு 5,000 கோடி ரூபாய் ஒதுக்கும் என்று, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஆனால், ஒரு ரூபாய் கூட வரவில்லை. இத்திட்டத்திற்காக மாநில அரசு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு காசோலைகள் விநியோகம் செய்யப்படும்.

பாகல்கோட் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், மேட்டி குடும்பத்திற்கு வாய்ப்பு அளிப்பது பற்றி, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.

யார் வேண்டுமானாலும் வேட்பாளராகலாம். பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். நாட்டில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு மத்திய அரசு தான் நேரடி பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us