தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பன்னரகட்டா பூங்காவுக்கு 30ல் விடுமுறை இல்லை

 பன்னரகட்டா பூங்காவுக்கு 30ல் விடுமுறை இல்லை

 பன்னரகட்டா பூங்காவுக்கு 30ல் விடுமுறை இல்லை


ADDED : டிச 12, 2025 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2025 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சர்ஜாபூர்: 'ஆங்கில புத்தாண்டை விடுமுறையை ஒட்டி மக்கள் அதிகம் வருவர் என்பதால், வரும் 30ம் தேதி பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை இல்லை' என்று பூங்கா நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பெங்களூரு பன்னரகட்டாவில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு உள்ள மிருகக்காட்சி சாலை, பட்டாம்பூச்சி பூங்காவை பார்த்து ரசிக்க பெங்களூரில் இருந்து மட்டுமின்றி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வருகின்றனர்.

பராமரிப்பு பணி காரணமாக வாரத்தில் செவ்வாய்க் கிழமை பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மற்ற ஆறு நாட்களிலும் பூங்கா செயல்பாட்டில் இருக்கும். சபாரி உள்ளிட்ட நடவடிக்கைகள் வழக்கம் போல நடக்கும்.

இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு விடுமுறையை ஒட்டி, பூங்காவுக்கு மக்கள் அதிகம் வருவர் என்பதால் வரும் 30ம் தேதி செவ்வாய்க் கிழமை பூங்காவுக்கு விடுமுறை இல்லை என்று நிர்வாகம் அறிவித்து உள்ளது. டிக்கெட் எடுக்க கவுன்டர்களில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே bannerughattabiopark.org ல் சென்று, ஆன்லைன் டிக்கெட்டுகளை எடுத்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us