கர்நாடகாவை யாராலும் காப்பாற்ற முடியாது பா.ஜ., விமர்சனம்: கர்நாடக பா.ஜ., 'எக்ஸ்' தளம் பதிவு:
கர்நாடகாவை யாராலும் காப்பாற்ற முடியாது பா.ஜ., விமர்சனம்: கர்நாடக பா.ஜ., 'எக்ஸ்' தளம் பதிவு:
ADDED : மே 29, 2026 12:17 AM
கர்நாடக காங்கிரசில் பதவிக்கான சண்டைக்கு தற்காலிகமாக முடிவு கட்டப்பட்டு உள்ளது. தலித்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தவறாக பயன்படுத்தியது; வால்மீகி கழகத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்தது; இளைஞர்களை ஏமாற்றியது.
விவசாயிகளை தற்கொலை க்கு தள்ளியது; சாமானிய மக்களுக்கு விலைகளை உயர்த்தி, கர்நாடகாவை கடன் சுமையில் தள்ளியது தான், கர்நாடக காங்கிரசின் மூன்று ஆண்டுகால சாதனைகளாகும்.
கர்நாடகாவின் வளர்ச்சியை முற்றிலும் முடக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக வசூல், ஊழல், கமிஷன் அரசியலில் மட்டுமே ஈடுபட்டிருந்த காங்கிரஸ், தற்போது, சித்தராமையா ராஜினாமா என்ற வடிவில் 'சிறு தடை' வந்துள்ளது.
மாநிலத்துக்கு புதிய முதல்வராக யார் வந்தாலும், கன்னடர்களுக்கோ, கர்நாடகாவுக்கோ எந்த பிரயோஜனமும் இல்லை.
ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தலித்கள், பின் தங்கிய சமூகத்தினரை ஒடுக்கி, சுரண்டி அரசை நடத்தும் அவர்களின் போக்கு எந்த இடையூறும் இன்றி தொடரும்.
மாநிலத்தை ஏ.டி .எம்., ஆக மாற்றி, கர்நாடகாவை திவாலாக்கி மாற்றுவதே காங்கிரஸ் மேலிடத்தின் ஒரே நோக்கம். மக்கள் விரோத அரசு அகற்றப்பட்டால் மட்டுமே, மாநில மக்கள் அமைதியான நாட்களை காண்பர்.
மாநிலத்தை கடந்த மூன்று ஆண்டுகள் வழி நடத்திய காங்கிரஸ் பொது செயலர்கள் வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தான் 'உண்மையான சூப்பர் முதல்வர்'கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
