'பா.ஜ., தலைவர் பதவிக்கு யாரும் போட்டி போடவில்லை'
'பா.ஜ., தலைவர் பதவிக்கு யாரும் போட்டி போடவில்லை'
ADDED : ஜூன் 21, 2026 10:46 PM

பெலகாவி: ''பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு யாரும் போட்டி போடவில்லை,'' என, மத்திய, உணவு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., மாநில தலைவர் பதவிக்கு போட்டி நடப்பதாக ஊடகங்களில் மட்டுமே விவாதிக்கப்படுகிறது. உண்மையில் கட்சி தலைவர் பதவிக்கு யாரும்போட்டி போடவில்லை.
எம்.எல்.சி., தேர்தலை அடிப்படையாக கொண்டு மட்டும் விஜயேந்திராவின் திறனை தீர்மானித்து விட முடியாது. அனைத்து ஏற்ற தாழ்வுகளையும் சந்தித்த பிறகும் பா.ஜ., உறுதியாக இருக்கிறது.
கர்நாடகாவில், 2028ல் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும். இந்த ஆண்டு நாட்டில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும். எனவே, அத்தியாவசிய உணவு பொருட்களை சேமித்து வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநிலத்தில் ஏற்கனவே தண்ணீர் பிரச்னை உள்ளது. எனவே, தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு விரைந்து எடுக்க வேண்டும். முதல்வர் சிவகுமாரின் கவனம் முழுதும், பிடதி டவுன்ஷிப் திட்டத்தின் மீதே உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
