/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பைக் டாக்சி இயக்க அனுமதி அளிக்கவில்லை: ஐகோர்ட் விளக்கம்
/
பைக் டாக்சி இயக்க அனுமதி அளிக்கவில்லை: ஐகோர்ட் விளக்கம்
பைக் டாக்சி இயக்க அனுமதி அளிக்கவில்லை: ஐகோர்ட் விளக்கம்
பைக் டாக்சி இயக்க அனுமதி அளிக்கவில்லை: ஐகோர்ட் விளக்கம்
ADDED : ஆக 22, 2025 11:11 PM
பெங்களூரு: 'பைக் டாக்சி இயக்க நாங்கள் அனுமதி அளிக்கவில்லை' என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
கர்நாடகாவில் மொபைல் செயலி மூலம் இயங்கும் பைக் டாக்சிக்கு ஜூன் 16ல் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடையை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து ஓலா, ஊபர், ராபிடோ நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்தன.
மீண்டும் துவக்கம் இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி, 'பைக் டாக்சி தடை, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், அரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.
பல மாநிலங்களில் பைக் டக்சிகள் இயங்க அனுமதி உள்ளதால், இதற்கான விதிகளை உருவாக்கி, செப்., 22ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டிருந்தனர்.
ஆனால், நேற்று முன்தினம் முதல் பைக் டாக்சிகள் இயங்குவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, 'பைக் டாக்சிகளுக்கு விதிகளை உருவாக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே தவிர, பைக் டாக்சி சேவையை துவங்கலாம் என்று கூறவில்லை' என்றார்.
பைக் டாக்சி இயங்குவதை தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி ஆகியோர் கவனத்துக்கு, அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி நேற்று கொண்டு வந்தார்.
துன்புறுத்தல் அப்போது அவர், 'செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவை நிறுவனங்கள், தங்கள் பைக் டாக்சி சேவையை துவக்கி உள்ளன.
நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பதற்கு முன், நீதிமன்றத்தின் கவனத்து கொண்டு வரவேண்டியது என் கடமை' என்றார். இதற்கு நீதிபதிகள், 'பைக் டாக்சி இயங்கலாம் என்று நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அரசு தேவையான நடவடிக்கை எடுக்கலாம்.
பைக் டாக்சி தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கூறியிருந்தோம். பைக் டாக்சிக்கான விதிகள் வகுப்பது குறித்து பரிசீலிப்பதாக நீங்கள் (அரசு தரப்பு) கூறியதால், நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
'இவ்விஷயத்தில் தேவைப்பட்டால், உத்தரவு பிறப்பிக்கப்படும். தேவையில்லை என்பதால் உத்தரவு பிறக்கவில்லை.
தனியார் பைக் டாக்சி ஓட்டுநர்களை துன்புறுத்த வேண்டாம்' என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
பைக் டாக்சி ஓட்டுநர்கள் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ''இந்த செயலிக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
''அதேவேளையில் செயலி அடிப்படையில் இயங்கும் டாக்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. சில பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
இதற்கு அட்வகேட் ஜெனரல், ''தனியார் பைக் டாக்சி சேவை வழங்குவோரை நாங்கள் கைது செய்யவில்லை. இந்த வாதம் சரியல்ல. அவர்களை நாங்கள் கைது செய்யமாட்டோம்,'' என்றார்.