இரண்டு மாதமாக சம்பளம் இல்லை: இந்திரா உணவக ஊழியர்கள் பாதிப்பு
இரண்டு மாதமாக சம்பளம் இல்லை: இந்திரா உணவக ஊழியர்கள் பாதிப்பு
ADDED : மே 12, 2026 06:54 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததால் இந்திரா உணவக ஊழியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
பெங்களூரில் ஏழைகளின் பசியை போக்கும் வகையில் இந்திரா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த உணவகங்களில் சமையல் வேலைகளில் உதவி செய்பவர்களுக்கு மாத சம்பளமாக, 7,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஊதியத்தை உயர்த்த வேண்டும் என உணவகம் ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால், அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தங்கள் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தை கட்ட முடியாத சூழலில் தவிக்கின்றனர்.
இதனால், உடனடியாக சம்பள தொகையை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். சம்பளம் வழங்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
