/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்னடத்தில் பேசுமாறு கூறியதால் வடமாநில பெண் வாக்குவாதம்
/
கன்னடத்தில் பேசுமாறு கூறியதால் வடமாநில பெண் வாக்குவாதம்
கன்னடத்தில் பேசுமாறு கூறியதால் வடமாநில பெண் வாக்குவாதம்
கன்னடத்தில் பேசுமாறு கூறியதால் வடமாநில பெண் வாக்குவாதம்
ADDED : ஜூன் 10, 2025 02:15 AM

பெங்களூரு: கன்னடத்தில் பேசுமாறு சொல்லிய ஆட்டோ ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடமாநில பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பிற மாநிலத்தவர்களுக்கும் இடையே சண்டை தொடர் கதையாகி உள்ளது. இதில், மொழி தொடர்பான சண்டைகளே பெரும்பாலானவை.
இதே பாணியில், சமீபத்தில் பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநருக்கும், வட மாநிலத்தை சேர்ந்த ஹிந்தி பேசும் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காசு கொடுப்பதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதை, தன் மொபைல் போனில், அந்த பெண் வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உள்ளார்.
இந்த வீடியோவில், ஹிந்தி பேசும் பெண் கூறுகையில், 'ஆட்டோவில் முன்பு கூறியதை விட கட்டணம் அதிகமாக வசூலிக்கிறீர்கள். கன்னடத்தில் ஏதோ பேசுகிறீர்கள்.
'நாங்கள் பெங்களூரின் பொருளாதாரத்திற்காக உழைக்கிறோம். இங்குதான் வரி செலுத்துகிறோம்' என்றார்.
இதை கேட்ட ஆட்டோ ஓட்டுநர் கூறுகையில், ''கர்நாடகாவில் இருந்து கொண்டு கன்னடத்தில் பேச மாட்டீர்களா? இங்குள்ள தண்ணீர், உணவு என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கிறீர்கள். ஆனால், ஹிந்தியில் பேசுவீர்கள்; கன்னடத்தில் பேச மாட்டீர்களா?'' என்றார்.
இந்த வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.