தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு நோட்டீஸ்

 ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு நோட்டீஸ்

 ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு நோட்டீஸ்


ADDED : பிப் 14, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஜாமினை ரத்து செய்யும்படி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பிக்கு, உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சித்ரதுர்கா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, 51. ஆன்லைன், ஆப்லைன் மூலம் சூதாட்டம் நடத்தி, அதில் கிடைத்த பணத்தை, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்த வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்க துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு மாதம் சிறையில் இருந்த அவருக்கு, கடந்த ஆண்டு டிசம்பர், 30ம் தேதி ஜாமின் கிடைத்தது.

வீரேந்திர பப்பி வெளியே இருந்தால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது; அவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என, அமலாக்கத்துறை சார்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சுனில் தத் யாதவ், அமலாக்கத்துறையின் மனுவுக்கு, ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கும்படி, வீரேந்திர பப்பிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us