/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவர்கள் சாப்பாட்டில் புழு ெஹச்.எம்.,முக்கு நோட்டீஸ்
/
மாணவர்கள் சாப்பாட்டில் புழு ெஹச்.எம்.,முக்கு நோட்டீஸ்
மாணவர்கள் சாப்பாட்டில் புழு ெஹச்.எம்.,முக்கு நோட்டீஸ்
மாணவர்கள் சாப்பாட்டில் புழு ெஹச்.எம்.,முக்கு நோட்டீஸ்
ADDED : டிச 16, 2025 05:22 AM
கொப்பால்: மாணவர்கள் சாப்பாட்டில் புழு நெளிந்தது தொடர்பாக, விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியருக்கு, பள்ளி கல்வி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கொப்பால் தாலுகா ஹலே நிங்காபுரா கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 'அக் ஷர தசோஹா' என்ற திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது.
கடந்த 9 ம் தேதி மதியம் மாணவர்கள் சாப்பாட்டில் அதிகமாக புழுக்கள் நெளிந்தன. இதனை யாரோ ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். வீடியோ வேகமாக பரவிய நிலையில், பள்ளி நிர்வாகம் மீது மாணவர்களின் பெற்றோர் அதிருப்தி தெரிவித்தனர்.
மாணவர்கள் சாப்பாட்டில் புழு நெளிந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு, பள்ளி கல்வி துறை நேற்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இரண்டு நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

