/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கட்டண உயர்வு அறிக்கை மெட்ரோவுக்கு நோட்டீஸ்
/
கட்டண உயர்வு அறிக்கை மெட்ரோவுக்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 08, 2025 06:17 AM
பெங்களூரு : பெங்களூரு மெட்ரோ ரயில் பயண கட்டணம் தொடர்பான கமிட்டி அறிக்கையை வழங்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகள், மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
பொது நிறுவனம் என்பதால் பி.எம்.ஆர்.சி.எல்., எனும் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், கட்டண உயர்வு அறிக்கையை வெளியிடுவது கடமை. மூன்று முறை பி.எம்.ஆர்.சி.எல்., இடம் கேட்டும் தரவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனு, நீதிபதி சுனீத் தத்தா யாதவ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக பதிலளிக்கும் மத்திய, மாநில அரசுகள், பி.எம்.ஆர்.சி.எல்.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.