/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புகை பிடிக்க இடம் ஒதுக்காத பப், ஹோட்டல்களுக்கு 'நோட்டீஸ்'
/
புகை பிடிக்க இடம் ஒதுக்காத பப், ஹோட்டல்களுக்கு 'நோட்டீஸ்'
புகை பிடிக்க இடம் ஒதுக்காத பப், ஹோட்டல்களுக்கு 'நோட்டீஸ்'
புகை பிடிக்க இடம் ஒதுக்காத பப், ஹோட்டல்களுக்கு 'நோட்டீஸ்'
ADDED : ஆக 02, 2025 01:46 AM
பெங்களூரு: புகை பிடிக்க இடம் ஒதுக்கி கொடுக்காத, பப், ஹோட்டல்கள் உட்பட 412 நிறுவனங்களுக்கு, பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பெங்களூரில் பப், ஹோட்டல், பார், ரெஸ்டாரண்ட், கிளப் உள்ளிட்ட இடங்களுக்கு வருவோர், மேற்கண்ட இடங்களின் முன்பு நின்று புகைப்பிடித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.
இதையடுத்து, மாநகராட்சியின் புகையிலை தடுப்புப் பிரிவு, கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
அதில் 30க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ள பப், ஹோட்டல், பார், ரெஸ்டாரண்ட், கிளப்புகளில் புகை பிடிப்பதற்கு என தனியாக இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஆனால் மாநகராட்சியின் உத்தரவை கடை பிடிக்காமல் பப், ஹோட்டல்கள் உள்ளிட்ட, வணிக நிறுவனங்கள் அலட்சியம் காட்டின. இந்நிலையில் நேற்று முன்தினம் மாநகராட்சியின் எட்டு மண்டலங்களில், பப், ஹோட்டல், பார், கிளப், ரெஸ்டாரண்டுகளில், மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனையின்போது 412 பப், ஹோட்டல், பார், ரெஸ்டாரண்ட் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், புகை பிடிக்க தனி இடம் அமைத்துக் கொடுக்காதது தெரிந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீசில் இன்னும் ஏழு நாட்களில், புகைபிடிக்க தனி இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.