தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உடல்நிலை பாதிப்பால் அவதிப்படும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

 உடல்நிலை பாதிப்பால் அவதிப்படும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

 உடல்நிலை பாதிப்பால் அவதிப்படும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


ADDED : ஜன 04, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2026 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் உடல் நிலை பாதிப்பால் அவதிப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு மேற்கத்திய உணவு பழக்கமே காரணம் என, வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இலவச சிகிச்சை இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், கர்நாடகாவில் சிறார்களின் உடல் ஆரோக்கியம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சிறார்களை மருத்துவ பரிசோதனை செய்த போது, 33.59 லட்சம் சிறார்கள் பல விதமான நோய்களால் அவதிப்படுவது தெரியவந்தது.

நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, தேவையான சிகிச்சை அளித்து குணப்படுத்தும் நோக்கில், அங்கன்வாடி சிறார்கள் முதல், 18 வயதுக்கு உட்பட்டோர் வரை, மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது.

நடப்பு, 2025 - 26ம் நிதியாண்டில், 93.41 லட்சம் சிறார்கள், மருத்துவ பரிசோதனைக்காக பதிவு செய்தனர்.

அதன்படி, பரிசோதனை நடத்தப்பட்ட சிறார்களில் பலருக்கு, சரும நோய், பல் பிரச்னை, பார்வை கோளாறு, காது கேளாமை, சுவாசப்பை பிரச்னை, இதயம் தொடர்பான நோய் உபாதைகள் இருப்பது கண்டறியப்பட்டது. 31.22 லட்சம் சிறார்களுக்கு சிகிச்சை பெறும்படி சிபாரிசு செய்யப்பட்டது. 27.74 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

430 மொபைல் குழுக்கள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சிறார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. 'சுவர்ண சுரக்ஷா டிரஸ்ட்' திட்டத்தில் பதிவு செய்து கொண்ட மருத்துவமனைகளில், இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிறவி நோய்களும் அடையாளம் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்ச்சி குறைபாடு உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அங்கன்வாடி சிறார்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை, பள்ளி மற்றும் பி.யு.சி., கல்லுாரி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ஒரு முறையும், பரிசோதனை நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில் மருத்துவ பரிசோதனை செய்ய, 430 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறார்களின் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்க மாநிலத்தின், 18 மாவட்டங்களில் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. பள்ளிகளுக்கு வரும் மொபைல் சுகாதார குழுக்கள், நோயால் பாதிக்கப்பட்ட சிறார்களை, இந்த சிகிச்சை மையத்துக்கு சிபாரிசு செய்வர். இங்கு சிறப்பு வல்லுநர்கள் உள்ளனர்.

சிறார்களுக்கு ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைஅதிகம் தென்படுகிறது. அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால், பார்வை குறைபாடு அதிகரிக்கும். நொறுக்குத்தீனிகள், மேற்கத்திய உணவு பழக்கங்களே, சிறார்களின் உடல் நிலை பாதிக்கிறது என, வல்லுநர்கள் கூறுகின்றனர். இத்தகைய உணவு பழக்கத்தை நிறுத்தி, ஆரோக்கியமான உணவு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us