/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நாள் முழுதும் சுறுசுறுப்பாக்கும் 'ஓட்ஸ் ஆம்லெட்'
/
நாள் முழுதும் சுறுசுறுப்பாக்கும் 'ஓட்ஸ் ஆம்லெட்'
UPDATED : ஜூலை 12, 2025 01:53 AM
ADDED : ஜூலை 11, 2025 11:35 PM

உடல் ஆரோக்கியத்துக்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. ஊட்டச்சத்து நிறைந்தது. நீரிழிவு நோயாளிகள், உடல் ஆரோக்கியத்தை விரும்புவோர், ஓட்ஸ் கஞ்சி குடிக்கின்றனர். ஓட்சில் பல விதமான சுவையான தின்பண்டங்கள், ஆம்லெட் தயாரிக்கலாம்.
செய்முறை
முதலில் ஓட்சை மிக்சியில் போட்டு தண்ணீர் அல்லது பாலுடன் நைசாக அரைக்கவும். அதன்பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து, முட்டைகளை உடைத்து ஊற்றவும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குட மிளகாய், கொத்துமல்லி தழை, உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கலவை, கட்டியாக இருக்க கூடாது. அதன்பின் அடுப்பில் வாணலியை வைக்கவும். சூடானதும் ஒரு ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமாக எரிய விடவும்.
ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள முட்டை, ஓட்ஸ் கலவையை ஊற்றி சமமாக பரப்பவும். அதை மூடி இரண்டு, மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும். அதன்பின் ஆம்லெட்டை திருப்பி போட்டு, மூடி போடாமல் வேக வைக்கவும்.
இரண்டு நிமிடம் வேக வைத்தால், சுவையான, ஆரோக்கியமான ஓட்ஸ் ஆம்லெட் தயார். தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி தொட்டுக்கொள்ள பொருத்தமாக இருக்கும்.
ஓட்ஸ், முட்டை என இரண்டுமே ஆரோக்கியத்தை அளிக்கும். இவற்றில் பல்வேறு வைட்டமின்கள் உள்ளன.
காலை டிபனுக்கு சாப்பிட்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்
- நமது நிருபர் -.