தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஒடிஷா காங்., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பா.ஜ., முயற்சி: சிவகுமார்

 ஒடிஷா காங்., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பா.ஜ., முயற்சி: சிவகுமார்

 ஒடிஷா காங்., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க பா.ஜ., முயற்சி: சிவகுமார்


ADDED : மார் 16, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு, ஐந்து கோடி ரூபாய் ஆசை காட்டி, ஆப்பரேஷன் தாமரை நடத்த, பா.ஜ., முயற்சிக்கிறது,'' என, துணை முதல்வர் சிவகுமார் குற்றம்சாட்டினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஒடிஷா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூரு புறநகர், பிடதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். பேட்ராயனபுராவில் வசிக்கும் சுரேஷ் என்பவரின் மூலமாக, பா.ஜ.,வினர் ஹோட்டலில் அறை புக் செய்து தங்கியுள்ளனர்.

இவர்கள் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு, ஐந்து கோடி ரூபாய் தருவதாக ஆசை காட்டியுள்ளனர்.ஒடிஷாவில் ராஜ்யசபா தேர்தல் நடப்பதால், ஆப்பரேஷன் தாமரைக்கு முயற்சி நடக்கிறது.

ஆனால் பா.ஜ.,வின் குதிரை பேரத்துக்கு, ஒடிஷாவின் எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் சம்மதிக்கவில்லை. பணம் கொடுக்க நான்கு பேர் வந்தனர். இதில் இருவரை எங்களுடையவர்கள் பிடித்துள்ளனர். அந்நபர்கள் வைத்திருந்த காசோலையுடன், போலீசில் புகார் அளித்தனர். நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

ஆப்பரேஷன் தாமரை நடத்த, பா.ஜ., முயற்சிக்கிறது. ஒடிஷா எம்.எல்.ஏ.,க்கள், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜன கார்கேவை சந்தித்து, அனைத்தையும் விவரிப்பர்.

இதற்கு முன் குஜராத் காங்., எம்.எல்.ஏ.,க்கள், பெங்களூருக்கு வந்தனர். அவர்களையும் நான்தான் பார்த்துகொண்டேன். அப்போது என்னென்ன வலிகளை அனுபவித்தேன் என்பது, அனைவருக்கும் தெரியும்.

ஜி.பி.ஏ.,வுக்கு நான் தேர்தல் நடத்துவேன். 369 வார்டுகளுக்கும் தேர்தல் நடப்பது உறுதி. சீட் கோரி 963 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முன் சட்டசபை தேர்தலில், பலருக்கு சீட் வழங்கவில்லை. அந்த விஷயத்தில் எனக்கும் திருப்தி இல்லை. இம்முறை ஜி.பி.ஏ., தேர்தல் ஓட்டுச்சீட்டில் நடக்கும். புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us