ADDED : மார் 02, 2026 05:30 AM

ஆனேக்கல்: ஒடிசாவில் இருந்து 20 நாட்களுக்கு முன் பெங்களூரில் குடியேறிய தம்பதி இடையே ஏற்பட்ட சண்டையில், இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் திபந்தா சபாரா, 31, மஞ்சுளா சபாரா, 27 தம்பதி. 20 நாட்களுக்கு முன், பெங்களூரு ஆனேக்கல் ஹீலலிகே கிராமத்தில், சிவகுமார் என்பவரின் வீட்டில் குடியேறினர்.
கடந்த 28ம் தேதி இவ்வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சிவகுமாரின் தாயார் சவுடம்மா, வீட்டின் அருகில் சென்று ஜன்னல் வழியாக பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் மஞ்சுளா இறந்து கிடந்தார். தன் மகன் சிவகுமாருக்கு தெரிவித்தார். அவரும், சூர்யா நகர் போலீ சாரு க்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மற்றொரு அறையில் கணவர் திபந்தா, துாக்கில் தொங்கிய நிலை யில் காணப்பட்டார்.
இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
வீட்டில் சோதனை செய்து பார்த்த போது, திபந்தாவின் மொபைல் போன் இருந்தது. அதில், 'இறந்து கிடந்த தன் மனைவியின் சடலம் அருகில் அழுது கொண்டே இருந்த காட்சிகள் காணப்பட்டன. அதன் பின், வீடியோவில் அவர் பேசுகையில், 'என் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் நானும் தற்கொலை செய்து கொள்கிறேன்' என கூறியிருந்தார்.
இறப்பதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், 'எனக்கும், என் மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் கோபத்தில் இருந்த மனைவி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நானும் தற்கொலை செய்து கொள்கிறேன்' என ஒடிசா மொழியில் எழுதி வைத்திருந்தார்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
