/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சிசிடிவி' காட்சிகளை தர மறுத்த அதிகாரிக்கு ரூ.10,000 அபராதம்
/
'சிசிடிவி' காட்சிகளை தர மறுத்த அதிகாரிக்கு ரூ.10,000 அபராதம்
'சிசிடிவி' காட்சிகளை தர மறுத்த அதிகாரிக்கு ரூ.10,000 அபராதம்
'சிசிடிவி' காட்சிகளை தர மறுத்த அதிகாரிக்கு ரூ.10,000 அபராதம்
ADDED : நவ 28, 2025 05:35 AM
மைசூரு: கண்காணிப்பு கேமரா காட்சிகளை தராமல் அலட்சியம் காட்டியதால், பெங்களூரு நகர கமிஷனர் அலுவலக பொது தொடர்பு தகவல் அதிகாரிக்கு, கர்நாடக தகவல் உரிமை ஆணையம், 10,000 ரூபாய் அபராதம் விதித்தது.
கர்நாடக ராஷ்ட்ர சமிதி கட்சியின், பெங்களூரு பிரிவு தலைவர் சிவராம், 2023 அக்டோபர் 12ம் தேதி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றிருந்தார். அப்போது ஏ.எஸ்.ஐ., ஒருவரிடம், அலுவலக ஊழியர் பகிரங்கமாகவே லஞ்சம் வாங்கினார்.
இது குறித்து, வழக்கு பதிவு செய்ய சிவராம் முடிவு செய்தார். இதற்காக சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தரும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், போலீஸ் கமிஷனர் அலுவலக பொது தொடர்பு அதிகாரியிடம், வேண்டுகோள் விடுத்தார்.
பல முறை கோரியும், அதிகாரி கேமரா காட்சிகளை தராமல் இழுத்தடித்தார்.
இது குறித்து, தகவல் அறியும் உரிமை ஆணையத்தில், சிவராம் புகார் அளித்தார்.
இது குறித்து, விசாரணை நடத்தி ய தகவல் உரிமை ஆணையம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை தராமல் அலட்சியம் காட்டிய, போலீஸ் கமிஷனர் அலுவலக பொது தொடர்பு அதிகாரிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இது குறித்து, கர்நாடக ராஷ்ட்ர சமிதி கட்சி செயல் தலைவர் ரகு ஜானகெரே கூறியதாவது:
மாநிலம் முழுதும்,போலீஸ் நிலையங்களில் ஊழல் நடக்கிறது. மற்றொரு பக்கம் போலீஸ் நிலையங்களில், மனித உரிமைகள் மீறப்படுகின்றன.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கண்காணிப்பு கேமரா காட்சிகளை தர அனுமதி இருந்தும், கேமரா காட்சிகளை தரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

