/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ., மொபைல் அழைப்பை ஏற்காத அதிகாரி 'சஸ்பெண்ட்'
/
எம்.எல்.ஏ., மொபைல் அழைப்பை ஏற்காத அதிகாரி 'சஸ்பெண்ட்'
எம்.எல்.ஏ., மொபைல் அழைப்பை ஏற்காத அதிகாரி 'சஸ்பெண்ட்'
எம்.எல்.ஏ., மொபைல் அழைப்பை ஏற்காத அதிகாரி 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 31, 2025 11:15 PM
சிக்கபல்லாபூர்: பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டியின் மொபைல் அழைப்பை ஏற்காத, சிறுபான்மை நல பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
சிக்கபல்லாபூர் பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பாரெட்டி. முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்.
இவர், கடந்த மூன்று நாட்களாக சிக்கபல்லாபூர் மாவட்ட சிறுபான்மை நல துறை அதிகாரி பிந்துமணிக்கு, மொபைல் போனில் அழைப்பு விடுத்து உள்ளார். ஆனால், பிந்துமணி மொபைல் போனை எடுக்கவில்லை.
கடுப்பான சுப்பாரெட்டி, பெங்களூரில் உள்ள சிறுபான்மை நல துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டார். சிறுபான்மை நல துறை துணை செயலர் எஜாஸ் பாஷாவிடம் பேசினார்.
'என் தொகுதியில் சிறுபான்மையினர் நல துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசுவதற்காக, அதிகாரி பிந்துமணிக்கு மூன்று நாட்களாக மொபைல் போனில் அழைப்பு விடுக்கிறேன்; எனது அழைப்பை அவர் ஏற்கவில்லை.
'மக்கள் பிரதிநிதியான என்னை அவமதித்து விட்டார். கடமையில் அலட்சியமாக செயல்படும் பிந்துமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார். இதையடுத்து பிந்துமணியை 'சஸ்பெண்ட்' செய்து, எஜாஸ் பாஷா உத்தரவிட்டு உள்ளார்.