தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அதிகாரிகளின் அலட்சியம் கோப்புகள் நனைந்து சேதம்

 அதிகாரிகளின் அலட்சியம் கோப்புகள் நனைந்து சேதம்

 அதிகாரிகளின் அலட்சியம் கோப்புகள் நனைந்து சேதம்


ADDED : மே 11, 2026 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 02:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: அரசு அலுவலகங்களில், கோப்புகளை பாதுகாப்பது அதிகாரிகளின் பொறுப்பு. ஆனால், இவர்களின் அலட்சியத்தால், கோப்புகள் மழையில் நனைந்து பாழாகியுள்ளன.

அரசு அலுவலகங்களில், திட்டப்பணிகள் உட்பட, பல்வேறு முக்கியமான கோப்புகள் உள்ளன. இவைகள் பாழாகாமல் பாதுகாப்பது அவசியம். ஆனால், இந்த விஷயத்தில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதன் விளைவாக கோப்புகள் பாழாகின்றன.

பெங்களூரின், கே.ஆர்.சதுக்கத்தில் பொதுப்பணித்துறையின் சிறப்பு நிலம் கையகப்படுத்தும் அதிகாரி அலுவலகம் உள்ளது. இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலம் கையகப்படுத்தியது, நிவாரணம் வழங்குவது தொடர்பான கோப்புகள் உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன், பெங்களூரில் கன மழை பெய்தது. அப்போது இந்த அலுவலகத்துக்குள் நீர் புகுந்ததில், முக்கியமான கோப்புகள் நீரில் நனைந்தன. இந்த கோப்புகளை அலுவலகம் முன் பகுதியில் உள்ள காலியிடத்தில், அப்பளம் உலர்த்துவதை போல ஊழியர்கள் பரப்பி வைத்து உலர்த்துகின்றனர். இதை கண்டு பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோப்புகளின் முக்கியத்துவம் அறிந்தும், அதிகாரிகள் பொறுப்பின்றி நடந்து கொள்கின்றனர். மழையில் நனைவதற்கு முன்பே, கோப்புகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றவில்லை. கோப்புகளில் உள்ள எழுத்துகள், முத்திரைகள் அழிந்து போகும் அபாயம் உள்ளது.

கோப்புகள் அழிந்தால், அரசுக்கும் கஷ்டம். பொது மக்களும் பாதிக்கப்படுவர். இது தொடர்பாக, அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கோப்புகளை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றாத அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us