/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமியின் திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்
/
சிறுமியின் திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்
ADDED : செப் 01, 2025 10:12 PM
தொட்டபல்லாபூர், : குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அதிகாரிகள், 16 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் புறநகரில் 16 வயது சிறுமி வசிக்கிறார். இவருக்கு பெற்றோர் கட்டாய திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். சிக்கபல்லாபூர், கவுரி பிதனுாரில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று முகூர்த்தம் முடிவு செய்திருந்தனர்.
மண்டபத்தில் உறவினர்கள், குடும்பத்தினர் நேற்று முன் தினம், நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தகவலறிந்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அதிகாரிகள், நேற்று காலை முகூர்த்தம் நடக்கும் வேளையில் அங்கு வந்தனர்.
சிறுமி வயது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது, அவருக்கு 16 வயது என்பது தெரிந்தது. எனவே திருமணத்தை தடுத்து நிறுத்தினர். சிறுமியை மீட்டு தேவனஹள்ளியின், சிறுமியர் பாதுகாப்பு மையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரது பெற்றோருக்கு புத்திமதி கூறினர்.