/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஒக்கலிகர் சங்க தலைவர் எச்சரிக்கை
/
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஒக்கலிகர் சங்க தலைவர் எச்சரிக்கை
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஒக்கலிகர் சங்க தலைவர் எச்சரிக்கை
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை ஒக்கலிகர் சங்க தலைவர் எச்சரிக்கை
ADDED : ஏப் 16, 2025 06:34 AM

பெங்களூரு : ''ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அறிவியல் பூர்வமற்றது. ஒக்கலிகர்களுக்கு அநீதி ஏற்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துவோம்,'' என மாநில ஒக்கலிகர் சங்க தலைவர் கென்சப்பா கவுடா தெரிவித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை அறிவியல் பூர்வமற்றது. யார் வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை, தற்போது வெளியிடுவதற்கான காரணம் என்ன.
இந்த அறிக்கையை அமல்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. எனவே, எங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள் தலைமையில், இரண்டு நாட்களில் ஆலோசனை கூட்டம் நடத்துவோம்.
இந்த அறிக்கை எங்களுக்கு மட்டுமல்ல, லிங்காயத் உள்ளிட்ட மற்ற சமுதாயத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அறிக்கையை அரசு அமல்படுத்தினால், லிங்காயத் உட்பட அனைத்து சமுதாயத்தினரும் நீதிமன்றம் மூலம் சட்டப் போராட்டம் நடத்துவோம்.
அரசு புதிய கணக்கெடுப்பு நடத்தினால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எக்காரணத்தை கொண்டும், இந்த அறிக்கைக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவிக்க கூடாது.
அறிக்கையில் உள்ள தகவல்கள்படி, மாநிலத்தில் 61 லட்சம் ஒக்கலிகர்கள் உள்ளதாகவும்; மரசு ஒக்கலிகர்கள் 3 லட்சம் பேர் உள்ளதாகவும் குறிப்பிட்டிருப்பது தவறு.
பெங்களூரு நகரம், பெங்களூரு ரூரலின் ஹொஸ்கோட், தேவனஹள்ளி, சிக்கபல்லாபூர், கோலார் மாவட்டங்களில் ஒக்கலிகர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
எங்கள் சமுதாய மக்களுக்காகவே மென் பொருள் தயாரித்து உள்ளோம். அதில் பட்டனை தட்டினாலே, டவுன், ஜாதி, உட்பிரிவு என அத்தனை தகவல்களும் கிடைத்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.