/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 'ஆயுள்'
/
சிறுமி பலாத்காரம் முதியவருக்கு 'ஆயுள்'
ADDED : ஜூலை 12, 2025 10:56 PM

மாண்டியா: மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, மாண்டியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின் பெளகோலா கிராமத்தில் வசிப்பவர் சிவண்ணா, 59. இவரது பக்கத்து வீட்டில் 3 வயது சிறுமி, தன் பெற்றோருடன் வசிக்கிறார். 2023 ஜனவரியில் சிறுமி, வீட்டு முன் விளையாடினார்.
சிறுமி தனியாக இருப்பதை கவனித்த சிவண்ணா, தின்பண்டம் தருவதாக ஆசை காட்டி, தன் வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு பாலியல் பலாத்காரம் செய்தார். இதை யாரிடமாவது சொன்னால், கொலை செய்வதாக மிரட்டினார்.
மகள் சோர்வடைந்திருப்பதை கவனித்த தாய், விசாரித்த போது நடந்ததை சிறுமி கூறினார். இவரது பெற்றோர் உடனடியாக, கிருஷ்ண ராஜ சாகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்படி 'போக்சோ' சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்த போலீசார், சிவண்ணாவை கைது செய்தனர்.
விசாரணையை முடித்து, மாண்டியா நகரின் இரண்டாவது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் சிவண்ணாவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு ஆயுள் தண்டனை, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.