/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூதாட்டியை கொன்று தாலி செயின் கொள்ளை
/
மூதாட்டியை கொன்று தாலி செயின் கொள்ளை
ADDED : நவ 05, 2025 11:48 PM

சுப்பிரமணியபுரா: மூ தாட்டியை கழுத்தை நெரித்து கொன்று, 45 கிராம் தாலி செயினை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு, உத்தரஹள்ளி நியூ மில்லினியம் பள்ளி சாலையில் வாடகை வீட்டில் வசிப்பவர் அஸ்வத் நாராயண், 67. இவரது மனைவி லட்சுமி, 65. அகர்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்யும் அஸ்வத் நாராயண், நேற்று காலை வழக்கம்போல வேலைக்கு சென்றார்.
மதியம் 12:15 மணிக்கு மனைவிக்கு போன் செய்தார்; அவர் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மீண்டும் போன் செய்தபோதும் லட்சுமி எடுக்கவில்லை. பக்கத்து வீட்டில் வசிக்கும் பனிராஜ் என்பவரை தொடர்பு கொண்டு, மனைவியிடம் போனை கொடுக்கும்படி கூறினார்.
வெளியே இருந்த பனிராஜ், தன் மனைவிக்கு போன் செய்து, லட்சுமி வீட்டிற்கு சென்று தகவலை கூறும்படி கேட்டுக் கொண்டார். பனிராஜ் மனைவி, அஸ்வத் நாராயண் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் லட்சுமி இறந்து கிடந்தார்.
லட்சுமியின் வலது பக்க கழுத்திலும், உதட்டிலும் காயம் இருந்தது. அவர் அணிந்திருந்த 45 கிராம் தாலி சங்கிலி மாயமாகி இருந்தது.
அஸ்வத் நாராயண் புகாரின்படி, சுப்பிரமணியபுரா போலீசார் கொலை, கொள்ளை வழக்குப் பதிவு செய்தனர்.
வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் லட்சுமியை தாக்கி, அவரது கழுத்தை நெரித்துக் கொன்று தாலி சங்கிலியை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நன்கு அறிமுகம் ஆனவர்களே கொலை செய்து, நகையை கொள்ளையடித்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

