ADDED : ஜூன் 20, 2026 03:30 AM

அ நிறம் | அளவு
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின் பசவனபுரா கிராமத்தில் வசித்தவர் சுப்பம்மா, 80. இவரது பிள்ளைகள் நேற்று காலை பணிக்கு சென்றதால், சுப்பம்மா வீட்டில் தனியாக இருந்தார்.
இதை நோட்டம் விட்ட மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து பலமான ஆயுதத்தால், மூதாட்டியின் மண்டையில் அடித்தனர். அதன்பின் அவரது காதுகளை அறுத்து, தங்க கம்மல்களை திருடி தப்பினர்.
பணிக்கு சென்றிருந்த மகள், மதியம் வீட்டுக்கு வந்த போது, தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார். கூடுதல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பலன் இன்றி, அந்த பெண் உயிரிழந்தார்.
மஞ்சேனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
